தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவ-மாணவிகளும் உயர்கல்வி எளிதாகக் கற்றிட அப்போதைய தமிழக முதல்வர் உயர்திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் விதி 110-இன் கீழ் ஏழுு கல்லூரிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு நாள் 20.03.2020.
அவ்வறிவிப்பின் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று முனைவர் ம.இராசமூர்த்தி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் அவர்களை அடிப்படை பணிகளை மேற்கொள்ளவும், மாணவர் சேர்க்கைக்கும் பொறுப்பாசிரியராக நியமித்து தற்காலிகமாக ஜெயங்கொண்டம், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், இவற்றில் இளங்கலைப் பாடப்பிரிவுகளும் கணிதம், கணினி அறிவியல் இவற்றில் இளமறிவியல் மற்றும் இளம் வணிகவியல் பாடப்பிரிவுகளும் துவங்கப்பட்டன. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 30.09.2020 அன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இராமஜெயலிங்கம் அவர்கள் தலைமையில் அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி இரத்னா முன்னிலையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை 12.10.2020 முதல் நடைபெற்றது. முதலாண்டில் 260 இடங்களும் நிரப்பப்பட்டு 01.10.2020 முதல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இணையவழியாக முதலாண்டு ஆரம்பிக்கப்பட்டு, பின் முனைவர் ம.இராசமூர்த்தி இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் அவர்களை முழு கூடுதல் பொறுப்புடன் முதல்வராக நியமித்து வகுப்புகள் ஜெயங்கொண்டம், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டது. 31.12.2020 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் முறைப்படி தற்காலிகமாக இணைவு வழங்கியது. 17.11.2021 அன்று முனைவர் இரா.கலைச்செல்வி அவர்களை கல்லூரியின் முதல்வராக அரசு நியமித்தது.
2025 -2026 கல்வியாண்டு முதல் தமிழ் வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு சுழற்சி II ல் வகுப்புகள் அரசால் அனுமதிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது முதலாமாண்டில் மாணவர்கள் சேர்க்கை 480 ஆக அதிகரித்துள்ளது. போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் தற்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணண் அவர்களின் வழிகாட்டுதலின் படி கல்லூரிக்கான நிரந்தர இடம் சின்னவளையம் அருகே 4.5 ஏக்கர் அரசு நிலத்தைக் கொண்டும் 2.33 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இடம் பெற்றும் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் கல்வியாண்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இக்கல்லூரி அதன் நிரந்தர இடத்தில் செயல்படும்.
"நாளை நீ யார் என்பதை இன்று நீ செய்யும் செயல் தீர்மானிக்கிறது"